Category: Uncategorized

Mr.K.Murugabharathi Speech at YADHAVA COLLEGE

மதுரை EMG யாதவா மகளிர் கல்லூரியின், Fresher’s Day விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நான் ஆற்றிய உரையை, விருட்சம் டிவி, YouTube-ல் Upload செய்துள்ளனர். முழு உரையின் ஒலிப்பதிவை, இந்த link-ல் கேட்டு, தங்கள் மேன்மைமிகு கருத்துகளைப் பதிவிடுங்கள். Source: blogspot Mr.K.Murugabharathi Speech at YADHAVA COLLEGE

Rtr.K.Murugabarathi Effective Speech | திருச்சி ராக்போர்ட் ரோட்டரி

திருச்சி ராக்போர்ட் ரோட்டரி சங்கத்தின் கூட்டத்தில், ஜூன் 9-ல்,  “வழியை மாற்றுங்கள் – தொழிலை அல்ல..!” என்ற தலைப்பில், 30 நிமிடங்கள் நான் ஆற்றிய உரையின் ஆடியோ, விருட்சம் டிவி மூலம் இணையத்தில் வெளியிடப் பெற்றுள்ளது. கேட்டுப் பயன்பெறுமாறு வேண்டுகிறேன். (Rtr முடித்து, Rtn ஆகி, அதிலிருந்தும் விலகிய பின், பழைய நினைவில் தம்பி Muthu Palaniappan, ‘Rtr’ என்று போட்டு விட்டார்.) Source: blogspot Rtr.K.Murugabarathi Effective Speech

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை

சில நாட்களுக்கு முன், சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று, நிறைய நூல்கள் வாங்கினேன். நூல் பட்டியலை, முகநூலில் பதிவிட்டேன். பிறகு, ஒரு சிந்தனை. புத்தகக் காட்சிக்குச் செல்வது, புத்தகங்களுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, வீடு / அலுவலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது… இவை எல்லாமே மற்றவரிடம் பெருமை பேசவே உதவும். படித்தால்தான் கற்க முடியும். பகிர்ந்தால்தான் மற்றவர்களுக்கும் பயன்படும். எனவேதான், புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில், வாசித்து உள்வாங்கி, என் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட முடிவு Read More …

கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு..?

     தேர்தல் நெருங்கி வருகிறது. எல்லா மனிதர்களும், எல்லா ஊடகங்களும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் இந்திய ஜனநாயகத்தில், கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யோசிப்போமா..!      தமிழர்களின் ரத்தத்திலேயே கட்சி ஊறியுள்ளது என நினைக்கிறேன். எப்படி வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், சாதி உள்ளுக்குள் கலந்தே இருக்கிறதோ அப்படி. குடும்பத்தில் குழந்தையிடம் கூட, ஏதேனும் விவாதம் வந்தால், “நீ எப்பவுமே அம்மா கட்சிதான்” என்கிறார் அப்பா. Read More …

இளைஞர்கள் ஆட்சி

உலகின் இளமையான நாடு இந்தியா என்று போற்றிக் கொண்டே இருக்கிறோம். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது மட்டுமே பெருமை ஆகாது. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், பெருமையா அல்லது பொறுப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.      இளைஞர்கள் பெரும்பாலும் சாதிக்கும் துறைகள் இரண்டுதான். ஒன்று விளையாட்டு. மற்றொன்று சினிமா. இந்தத் துறைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என்றாலும், நம் நாட்டை முன்னேற்ற இந்தத் துறைகள் உதவாது. அதற்கு முக்கியமான துறை… அரசியல்..! Read More …

தமிழனின் அரசியல்

செவிகள் சேர்த்ததை விட செய்திகளில் பார்த்துத்தான் தமிழரின் நிலை அறிந்தேன்..! தரத்தினை உயர்த்திட அரசியல் புகுவதென்று என்னால் இயன்றவரை எல்லாக் கட்சிகளும் தன்னார்வத்துடன் தேடித் திரிந்தேன்..! அதிமுகவில் சேர முடியுமா..? முதுகு வலி உள்ளதால், பிட்னெஸ் இல்லையாம். திமுகவில் தேற முடியுமா..? தலைவர்களின் ரேஷன் கார்டில் என் பெயர் இல்லாததால் தகுதி இல்லையாம். மதிமுகவுக்கு மாற முடியுமா..? அங்கே… நடக்கத்தான் முடியும். அமர முடியாதாம். பாமகவுக்குள் பாய முடியுமா..? அங்கே… ஓடத்தான் முடியும். நிற்க முடியாதாம். தேமுதிகவுக்குத் Read More …

ஒரு பக்கக் கதை – பாதுகாப்பு

நள்ளிரவு நேரம். ஒரு இளம்பெண் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தனியே காத்திருந்தாள். ஒரு பேருந்து வந்ததும் ஏறினாள். பேருந்தின் உள்ளே மொத்தமே ஆறேழு பேர்தான். அங்கங்கே சிதறி  இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள். டிக்கெட் கொடுக்க வந்த நடத்துநர், அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போனார். பேருந்து ஆள் அரவமற்ற, இருள் கவிந்த சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு பயணி அவளை நெருங்கினார். ஒரு சீட் இடைவெளி விட்டு அமர்ந்தார். அவள் முகத்தில் எந்தப் பதற்றமும் Read More …

Short note about Dr. Rajendra Prasad

சிறந்த வழக்கறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், நம் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் ஆகிய  டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவருடைய பிறந்தநாளான  டிசம்பர் 3-ஆம் நாள், தேசிய வழக்கறிஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. பொது மக்களின் நன்மைக்காகப் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு என் வணக்கங்களும், வாழ்த்துகளும். Source: blogspot Short note about Dr. Rajendra Prasad

ஒரு பக்கக் கதை: தலைப்பு – கேவலம்

அந்தப் பயணிகள் ரயில் ஊர்ந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இல்லாததால் எரிச்சலோடும், பரபரப்போடும் நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருந்தார் அவர். கைப்பேசி ஒலித்தது. அழைப்பை ஏற்றுப் பேசினார். “எத்தனை தடவை சொல்றது..? சொன்ன அமௌன்ட்க்கு ஒரு ரூபாய் கூடக் குறையக் கூடாது. நான் என்ன வியாபாரமா பண்றேன்… நீங்க பேரம் பேசுறதுக்கு..? நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர்ங்கறதை ஞாபகத்துல வச்சுக்கங்க. இதுல பல பேருக்குப் பங்கு கொடுக்கணும். உங்க காரியம் முடியணும்னா நீங்க கொடுத்துத்தான் ஆகணும்..!” கோபத்துடன் Read More …

எண்ணங்களை மாற்றுங்கள்..! எதிரிகளை அல்ல..!

நாடே எதிர்பார்த்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பிஜேபி தலைமையிலான கூட்டணி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தி-இந்து உள்ளிட்ட பெரும்பான்மையான ஊடகங்கள் நிதிஷைப் புகழ்ந்தும், மோடியை இகழ்ந்தும் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன. விவரங்கள் எல்லாம் சரி..! ஆனால், விளக்கங்கள் சரியா..?             ஊடகவியலாளர்களும், அறிவாளிகளும் (?) பெரும்பாலும் ஒருவிதமான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையையே வெளிப்படுத்துகின்றனர். இரண்டுக்கும் இடையேயான Read More …