கவி. முருகபாரதி

என் எண்ணங்கள் -- நீங்கள் வாசித்து மகிழ... நேசித்து வாழ... யோசித்து வளர...

Blog Post

Posted by Muruga Barathi Kannan on July 1, 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை: – 2

நூல்: வாங்க அறிவியல் பேசலாம் ஆசிரியர்: இரா. நடராசன் வெளியீடு: Books for Children பக்கங்கள்: 112        விலை: ரூ. 80/- பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்தும், (1996-ல் அது உசத்தி) +1-ல் Commerce Group-ல் நான் சேர்ந்ததற்குக் காரணமே, எனக்கு அறிவியல் பாடம் பிடிக்காது என்பதால்தான். அப்படிப் பிடிக்காமல் போனதற்கு ஒரு ஆசிரியர்தான் காரணம் என்றாலும், அதற்குப் பின்னும் சுமார் 15 ஆண்டுகளுக்கு, (சுஜாதாவின் நூல்கள் தவிர) எனக்கும் அறிவியல் குறித்த புத்தகங்களுக்கும் தொடர்பே

Posted by jinishivs on June 29, 2016

Rtr.K.Murugabarathi Effective Speech | திருச்சி ராக்போர்ட் ரோட்டரி

திருச்சி ராக்போர்ட் ரோட்டரி சங்கத்தின் கூட்டத்தில், ஜூன் 9-ல்,  “வழியை மாற்றுங்கள் – தொழிலை அல்ல..!” என்ற தலைப்பில், 30 நிமிடங்கள் நான் ஆற்றிய உரையின் ஆடியோ, விருட்சம் டிவி மூலம் இணையத்தில் வெளியிடப் பெற்றுள்ளது. கேட்டுப் பயன்பெறுமாறு வேண்டுகிறேன். (Rtr முடித்து, Rtn ஆகி, அதிலிருந்தும் விலகிய பின், பழைய நினைவில் தம்பி Muthu Palaniappan, ‘Rtr’ என்று போட்டு விட்டார்.) Source: blogspot Rtr.K.Murugabarathi Effective Speech

Posted by jinishivs on June 19, 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை

சில நாட்களுக்கு முன், சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று, நிறைய நூல்கள் வாங்கினேன். நூல் பட்டியலை, முகநூலில் பதிவிட்டேன். பிறகு, ஒரு சிந்தனை. புத்தகக் காட்சிக்குச் செல்வது, புத்தகங்களுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, வீடு / அலுவலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது… இவை எல்லாமே மற்றவரிடம் பெருமை பேசவே உதவும். படித்தால்தான் கற்க முடியும். பகிர்ந்தால்தான் மற்றவர்களுக்கும் பயன்படும். எனவேதான், புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில், வாசித்து உள்வாங்கி, என் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட முடிவு

Posted by jinishivs on April 12, 2016

கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு..?

     தேர்தல் நெருங்கி வருகிறது. எல்லா மனிதர்களும், எல்லா ஊடகங்களும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் இந்திய ஜனநாயகத்தில், கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யோசிப்போமா..!      தமிழர்களின் ரத்தத்திலேயே கட்சி ஊறியுள்ளது என நினைக்கிறேன். எப்படி வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், சாதி உள்ளுக்குள் கலந்தே இருக்கிறதோ அப்படி. குடும்பத்தில் குழந்தையிடம் கூட, ஏதேனும் விவாதம் வந்தால், “நீ எப்பவுமே அம்மா கட்சிதான்” என்கிறார் அப்பா.

Posted by jinishivs on April 5, 2016

இளைஞர்கள் ஆட்சி

உலகின் இளமையான நாடு இந்தியா என்று போற்றிக் கொண்டே இருக்கிறோம். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது மட்டுமே பெருமை ஆகாது. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், பெருமையா அல்லது பொறுப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.      இளைஞர்கள் பெரும்பாலும் சாதிக்கும் துறைகள் இரண்டுதான். ஒன்று விளையாட்டு. மற்றொன்று சினிமா. இந்தத் துறைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என்றாலும், நம் நாட்டை முன்னேற்ற இந்தத் துறைகள் உதவாது. அதற்கு முக்கியமான துறை… அரசியல்..!

Recent Comments